கற்று ஓதல்
ஆமீக அன்பர்களே!
இந்த ஆன்மீக பயிற்சி வகுப்பு என்றால் என்ன? இதனால் நமக்கு என்ன பயன்?என்ற என்னம் அனைவருக்கு தோன்றும்.
பக்தன் என்று நாம் ஏன் சொல்கிறோம். ஏன் ஹிந்துவாக இருக்க வேண்டும். ஏன் ஆலயங்களில் சென்று வழிபட வேண்டும்.ஸ நாதன தர்மம் என்றால் என்றால் என்ன?
ஆலயங்களில் அர்ச்சனை ஏன் செய்ய வேண்டும். புஷ்பங்களை ஏன் தெய்வங்களுக்கு சார்த்தவேண்டும். நைவேதியம் ஏன் செய்கிறோம். அதனை பிரசாதம் என்று ஏன் சொல்கிறோம். இறைவனுக்கு ஏன் அபிஷேகம் செய்கிறோம். இறை உருவங்கள் கருங்கற்களாலும் பஞ்சலோகங்களாலும் ஏன் உருவாக்கப்படுகிறது? இறைவனுக்கு ஏன் வஸ்திரங்கள் சாத்துகிறோம்.
சுந்தன் குங்குமம் போன்றவற்றால் ஏன் அபிஷேகம் செய்கிறோம். தீபம் ஏன் ஏற்றுகிறோம். (எந்த திசை நோக்கி ஏற்றக் கூடாது) எலுமிச்சம் பழ தீபம் ஏன் எற்ற உள்ளது. அதற்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏன் கும்பாபிஷேகம் நடை பெறுகிறது. இதனால் என்ன பயன்.
பல தெய்வ சம்பந்த நிகழ்ச்சியில் கணபதி நவக்கிறஹ வாஸ்து போன்ற ஹோமங்கள் செய்கிறோம். அந்த ஹோமங்களை ஏன் அக்கினியில் செய்கிறோம்.
திருமணம் போன்ற சம்பிரதாயம் தேவையா அதன் மகிமை என்ன?
குழந்தைகள் பிறந்தவுடன் நாமகரணம் என்ற பெயர் வைக்கும் நிகழ்ச்சி செய்கிறோம். அது எதற்கு?
நமது நாட்டில் வருடம் முழுவதும் பல பண்டிகைள திருவிழாக்கள் கொண்டாடுகிறோம். அது தேவையா! அதன் பெருமைகள்.
இவைகள் போன்ற ஹிந்து ஸம்ப்ரதாய விஷயங்கள் தெரிந்து கொண்டு நமது சந்ததியின் மூலம் வழிவழியாக கடைபிடித்து வந்தால் நமக்கும் நமது தேசத்திற்கும் பெருமை. இது மட்டும் அல்லது நமக்கும் சமுதாய விழிப்புணர்வு மிகவும் தேவை படக்கூடிய காலமாக இருப்பதால் திருவள்ளுவர் கூறியதுபோல்
எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பது அறிவு.
என்றும் மனித ஒற்றுமையும் சமுதாய தேச ஒற்றுமையும் மனித நேயம் கலாச்சாரம் மாறாமல் இருப்பதற்கு. நமது பாரத தேசத்தில் ரிஷிகளும் மகான்களும் நமக்கு இறைவழிபாட்டை உலகறிய வைத்தனர்.
அப்பெருமை வாய்ந்து நமது நாடு தேசத்தில் ஈஸ்வரன் தானே ஞான குருவாக ஸ்ரீ தக்ஷினாமூத்தி வடிவம் கொண்டு நல் உபததேசங்களை ரிஷிகளுக்கு வழங்கி அவ்வழி வந்த வேத வியாசர் முதல் ஸ்ரீ ஆதிசங்கரர் வரையும் மேலும் குல பரம்பரை தொடர்ந்து இந்த கலி உலகில் நாயன்மார்களாகவும். ஆழ்வார்களாகவும் அருணகிரி நாதர் ரமணர் ஸ்ரீ அரவிந்தர் போன்ற மகான்களும் மனித ஆன்மீக வழிபாட்டிற்கு தேவையான பல ஸ்தோத்திர கிரந்தங்களை வழங்கி உள்ளனர்.
சக்தி வாய்ந்த அவ்வளவு பெருமை மிக்க ராமாயணம் போன்ற இதிஹாசங்களும், சிவானந்தலஹரி, ஸெளந்தர்யலஹரி ,ஸூப்ரமண்ய புஜங்கம், கனகதாரா ஸ்தோத்திரம் போன்ற ஆதிசங்கர க்ரந்தங்களும் தேவாரம் திருவாசகம் திருப்புகழ் வினாயகர் அகவல் அபிராமி அந்ததி சிவபுராணம் போன்ற பயன் தரும் பதிகங்களும் ஹிந்து ஆன்மீக வழிபாட்டு முறைகளும் ஜோதிடம் மற்றும் பல வியாதியை குணமாக்கும் வழி முறைகளையும் மரங்களையும் குணங்களையும் அதன் பயனும் பல புண்ய தீர்த்தங்களின் பெருமையும் நாம் அவசியம் தெரிந்து கொள்ள சென்னை தாம்பரம் செம்பாக்கத்தில் அமைந்து அருள் பாலிக்கும்.
ஸர்வ வியாதி ப்ரஸ்மனியாக..
லலிதா ஸஹஸ்ர நாமத்தில் கூறியது போல் ஸ்ரீ ராஜராஜேவரியின் பரிபூரண க்ருபையுடன் அமைத்து உள்ள ஸ்ரீ அகில லோக ஸ்ரீதச மஹா பீடம் சார்பில் ஒவ்வொரு இடங்களிலும் நமது கலாச்சார ஆன்மீக பயிற்சி வளர்க்கும் விதமாக பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டு இருக்கிறது . இப்பயிற்சியில் கலந்து கொண்டு நாமும் நமதுஉற்றார் உறவினர்கள் பயன் பெற அன்னை பராசக்தியின் அருளுக்கு பாத்திரமாவோம்.
குறிப்பு : இந்த அரிய் பயிற்சியில் கலந்து கொள்பவர்கள் கீழ் கண்டவற்றை அவசியம் பின்பற்ற வேண்டும்.
1. ஆங்களும் பெண்களும் கலாச்சார ஆடை கட்டாயம்
2. நெற்றியில் விபூதி குங்குமம் திலசம் போன்றவை
3. கழுத்தில் ருத்ரக்ஷம் அணிவது
4. கோபம் சண்டை குறைகூறுதல் போன்றவை தவிற்க வேண்டும்
5. அனைவர் இடத்தில் பசுபோல் பாசத்துடன் பழகி நமது ஆதம குணத்தை வளர்த்துதல் (வளத்துக் கொள்ளுதல்)
6. குல பக்தி இறைபக்தி தேசபக்தி மாதா பிதா இடத்திலும் பக்தியாக இருத்தல் வேண்டும்
7. உணவு போன்ற நமது தினசரி பழக்கவழகங்களில் தூய்மையாக இருக்க வேண்டும்
8. ஆன்மீக பயிற்சி பற்றி அறிந்தவுடன் அதை பற்றி வீட்டில் உள்ளவர்களுக்கும் எடுத்துறைத்து கூட்டு பிராத்தனையில் ஈடுபட வேண்டும்
9. நமது வீட்டில் தினசரி பூஜை/ வழிபாட்டு முறைகள்
10. இத்தகைய அறிய வாய்ப்பு ஸ்ரீ அன்னை பராசக்தியின் அருளால் இப்பயிற்சியில் அமைதி ஒழுக்கம் பொருமை போன்றவை கடைபிடித்து தினமும் காலை மாலை வேளைகளில் தியானம் ஆன்மீக வழிபாடுகள் செய்து அம்பாளின் அனுக்கிரஹம் அடைய வேண்டுகிறோம்.
பயிற்சி தரப்படும் விஷயங்களும் ஸ்தோதிரங்களும்
விநாயகர் அகவல் (குரு வந்தனம்)
ஸூரிய நமஸ்காரம்(ஆதித்யஹ்ருதய தோத்திரம்) (தமிழ் மற்றும் ஸமஸ்கிருதத்தில் பயிற்சி)
தேவாரரம் திருமுறை பதிகங்களும் , திருப்புகழ் அபிராமி அந்தாதி போன்ற தமிழ் பாடல் பயிற்சி ஆழ்வார்களின் பாகரங்களும்.
பல பயன்தரும் ஸ்தோத்திரங்களும், கூட்டு ப்ராத்தனை முறையும், பகவத்கீதை , இராமயணம், போன்ற இதிஹாஸ புராணங்களின் முறையான பாராயண வகுப்புகளும்.
இதில் கலந்து கொண்டு கடைசியில் பசுவாளை நிகுணமாக காண்பதற்கு அறிய பதஞ்சலி யோக சாஸ்திர விஷ்யங்களை இப்பயிற்சியில் முதிர்ச்சி பெறுபவர்களுக்கே உபதேசிக்க ஆலோசிக்கப்படும்.
அன்பான வாழ்க்கை தான் கடவுள் வடிவம்
அனைவருக்கும் ஆன்மீகம்
சுபம்
உங்களுக்கான் பிராத்தனை செய்ய அழைக்கலாம் 044 – 24330474
Bank Details : Indian Bank , A/c No: 6480293787
Branch : MGT, Chennai -600 001. IFSC Code : IDIB000M002
இதில் சேர விருப்பம் உள்ள அன்பர்கள் கீழ்கண்ட மனகோட்பாடு இருப்பின் சேர்ந்து தொண்டு புரியலாம்
1. பதவி ஆசை, பொறாமை இருக்கக்கூடாது?
2. பெரியர், சிறியவர் பாகுபாடு பார்க்கக்கூடாது.
3. கிண்டல், கேலி பேச்சு மற்றவர்கள் மனம் புண்படும் படி பேசி நடக்கக்கூடாது?
4. பசி, தாகம், தூக்கம் இல்லாமல் வேலை பார்ப்பது அவசியம்.
5. பொருகள் மீதோ, பண ஆசையோ இருக்கக்கூடாது.
6. ஜாதி, மதம், பேதம் பார்ப்பது, அவதூறு பேசுவது கூடாது.
7. வயது முதிந்தவர்களுக்கு மரியாதை தந்து கோபப்படாமல் இருப்பது அவசியம்.
8. கௌரவம் பார்க்காமல் உதவி புரிந்திட வேண்டும்.
9. அரசியல் பேசுவது கூடாது.
10. வேலைக்கு செல்பவர்கள் விடுப்பு எடுத்து வரக்கூடாது.
11. அன்பு, அறம், இன்பம் என்று இருக்க வேண்டும்.
12. மக்கள் பணி மகத்தான பணி என்பதாக இருக்க வேண்டும்.
13. கணவன், மனைவியாக இருந்தால் இருவரும் சேர்ந்தே சேவை புரிய வேண்டும்.
14. அதிகார துஷ்பிரயோகமோ அல்லது சச்சரவுகள் இருக்கக்கூடாது.
15. தொண்டு உள்ளமும், உதவிடும் எண்ணமும் இருக்க வேண்டும். தனக்கு என்று எதையும் எடுத்து வைக்காமல் பொது நலமாக இருக்க வேண்டும்.
16. சமய கலாச்சார நம்பிக்கை இருத்தல் வேண்டும்.
17. உயிருக்கு ஆபத்தான காரியங்களில் ஈடுபடக்கூடாது.
18. காமப்பேச்சு துறக்க வேண்டும், தாய் உள்ளம் வேண்டும்.
19. மனித நேயம் இருக்க வேண்டும்.